Friday, 29 April 2011

சாதலற்ற தேடல்…

.
உன் உள்ளங்கை ரேகை எனும்
ஒற்றையடிப் பாதை வழியே
தொடரும் என் பயணத்தில்
எனக்கான வழித்துணையாய்
எப்போதும் வருவது
உன் நினைவுகளன்றி 
வேறென்ன சகியே..
 
உன் உச்சந்தலை வகிடு வழியே
உயிருக்குள் இறங்கும் என் முத்தங்கள்  
உன்னத மெல்லிசை சிந்த
உன் வெட்கங்கள்தானடி ஜதியே..
 
சாதலற்ற தேடல் கொண்ட காதல் வாழ்த்துக்களோடு…
 
பிரியமுடன்…
பிரியன்…
.

No comments: