Friday, 29 April 2011

காத்திருக்கும் வெளிச்சம்…

ஒவ்வொருநாள் காலையிலும்
எப்போது நீ கதவு திறப்பாயென 
எப்போதும் காத்திருந்து
திறந்தவுடன் பாய்ந்துவந்து
காலடியில் தவழ்கிறது
இந்த சூரிய வெளிச்சம்
உன் பாதங்களை வருடியபடி..

No comments: