Monday 17 October 2011

vaalthirku nanri.....


அமைதியான
உனது
அன்பினால்
அனைவரையும்
கவர்ந்தாய் !!
நட்புக்கு
அழகான
இலக்கணம்
உன்னையன்றி
யார் இருக்க முடியும்??
எளிய
வரிகளில்
எண்ணற்ற
கவிதைகளை
சத்தமின்றி
சமர்பித்தாய் !!
பல நூறு
கவிதைகளை
படைத்த
உனது
சாதனைகள்
சாதாரணமானவைகளல்ல !!
இன்று
பிறந்த நாள்
ஆசரிக்கும்
உனக்கு
எங்களது
பாராட்டுகளும்
பரிசுகளும்
பெரிதல்ல
எங்களது
பாசத்தைவிட . . . . .
நீ
பல்லாண்டு
மகிழ்வுடன்
இனிதே
வாழ்ந்திருக்க
இதயத்தின்
ஆழத்திலிருந்து
வாழ்த்துகிறேன் !!!
உனது
வாழ்க்கை பயணம்
என்றும் இல்லாத
புது ஆண்டாய்
இந்த ஆண்டு
தொடரட்டும்……,
என்றும்
இறைவனின்
நல்லாசி
உன்னோடு !!
என்றும் அன்புடன்…..
– - – - – - நிது

Saturday 15 October 2011

என் கல்லறையில்


கல்லறையில்கூட நாடகம் 

அவள் கண்களை 
பார்த்து மயங்கினேன் 
எனகாக கண்ணீர் சிந்துவாள் என்று 
சிந்தினால் 
என் கல்லறையில் 
அதுவும் நாடகத்திறிக்கு 
ஒத்திகையம் 

சோம்பலின் விளைவு


சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
அது இதயத்தின் இசை!
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
அது சக்தியின் பிறப்பிடம்!
விளையாட நேரம் ஒதுக்குங்கள்
அது இளமையின் ரகசியம்!
படிக்க நேரம் ஒதுக்குங்கள்
அது அறிவின் ஊற்று!
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்
அது மகிழ்ச்சிக்கு வழி!
உழைக்க நேரம் ஒதுக்குங்கள்
அது வெற்றியின் விைல!
நண்பரை கூட்டல் வேண்டும்
பகைவரை கழித்தல் வேண்டும்
இன்பங்களை பெருக்கல் வேண்டும்
துன்பங்களை வகுத்தல் வேண்டும்
மெதுவாய்ப் பேசு, மெய்யே பேசு!
இனிமையாய்ப் பேசு, இணக்கமாய்ப் பேசு!
அன்பாய்ப் பேசு, அடக்கமாய்ப் பேசு!
சிந்தித்துப் பேசு, சுருக்கமாகப் பேசு!
உண்மை உயர்வை அளிக்கும்
பொய்மை உயர்வை அழிக்கும்
அன்பு துன்பத்தை குறைக்கும்
செல்வம் துன்பத்தை பெருக்கும்
சோம்பலின் விளைவு தரித்திரம்
முயற்சியின் விளைவு முன்னேற்றம்

உன்னை போல் ஒருத்தி


உன்னை போல் ஒருத்தி 

உயிர் தந்து தாயானாள்.. 

உடன் பிறந்து உறவானாள்.. 

மனம் தந்து நட்பானாள்.. 

உலகம் தந்து மனைவியானாள்.. 

பெண் இன்றி இயங்க முடியாது 

எந்த ஆணும்...!. 

காதலை கடைச்சரக்காய்.. 

காயப்படுத்திய உன்னை மட்டும் 

பெண்ணென்று ஏற்க முடியாது 

எந்நாளும் ....!


தேடித் தேடி


உன்
பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல
வாசகம்
தேடித் தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான
என்
கவிதை
*
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்

என் காதலை போல்


கற்களோ ,முற்களோ இல்லை 
ஆனால் காயங்களுக்கு பஞ்சமில்லை 
அவ்வளவு ஆழமில்லை 
என் காதலை போல் 
ஆனால் வலி அதிகம் தான் 
உன் வார்த்தைகளினால் 
உண்டாகும் காயங்களில்

குப்பைத்தொட்டி....

''அலுவலகத்தில்
குப்பைத்தொட்டி.
குப்பை பொறுக்கி
வாழ்பவனுக்கோ
அதுதான் அலுவலகம்''

உன்னை இழந்த நாள் முதல்


என்னை பிடிக்கவில்லை என்றால் ஒரே வார்த்தையில் 
பிடிக்கவில்லை என்று விலகிவிடு ........ 

என்றாவது சந்தோசம் தருகிறாய் அதை அனுபவிக்க 
முதலே வார்த்தையால் கொல்கிறாய்........ 

நான் சிரிப்பது பிடிக்கவில்லை என்றால் என்னை வெறுத்து 
விடு வாழ்க்கை முழுவதும் சிரிக்கவே மாட்டேன் ...... 

என்னை வருத்துவதாய் எண்ணி வெறுப்பாய் பேசி பேசி 
என் உயிர் போன பின் உன் சிரிப்பை இழந்து விடாதே .... 

இறுதியாய் ஒன்று சொல்கிறேன் உன்னை இழந்த நாள் 
முதல் நான் உயிரில்லா ஜடம் தானடி ,,,,,

உருவான கிறுக்கல்கள்...


இதயத்தில் வாழும் 
நினைவுகளுக்கு முடிசூட்டுவிழா... 
உதறி சென்ற மனசுக்கு 
மன மேடையில் 
பாராட்டு விழா... 
ஏமாற்றம் தந்த உயிருக்கு நன்றியுரை... 
ஆசையை அடக்க கற்று தந்தாய்.. 
மனக்கல்லில் சிற்பம் செதுக்கினாய்.... 
இதுவும் நீ உரைத்த 
நினைவுகளால் 
உருவான கிறுக்கல்கள்... 


Wednesday 5 October 2011

நீங்காமல் இருப்பேன் ....

என் உயிர் என்னை விட்டு
நீங்கும் போது ஓர் நாள்
அறிவாய் உயிர் காதலின்
உன்னதம் ...ஏன் தெரியுமா ?
உயிர் நீங்கும் போதும்
உன்னை விட்டு நான்
நீங்காமல் இருப்பேன் ....

உன் உருவத்துடன் வாழ்ந்துவிடுகிறேன்....


தொலை பேசியில் அன்பை
தந்தாய்.....உருவம்
இன்றி உணர்வுகளுடன்
வாழ்ந்தேன் ....
...கணணியிலே உந்தன்
நிஜத்தை பார்த்தேன் ..
உணர்வுகளுக்கு உருவம்
கிடைத்தது ......
உணர்வுகளை பிரிந்த
போதே உள்ளம் தீயில்
வெந்த வேதனையை
உணர்ந்ததே ....உந்தன்
உருவத்தை எப்பிடி
நான் பிரிவேன் ...
உன்னோடு வாழாத
போதும் உன் உருவத்துடன்
வாழ்ந்துவிடுகிறேன்
கற்பனையில் ஆவது ...

உன் ஆயுதங்கள்....


தொட்டால் சிணுங்கும் பெண்செடி
அதை தொட்டுவிளையாடும்
உன் சிறுகுழந்தை நான்
டல் நீரலையில் தாமரையாட
இலையிதழ் மடியினில் தத்தளிக்கும்
நீர்த்துளி குழந்தை நான்
ன் மௌனக் குழந்தைகள்
என்னுடன் வீண் சண்டையிட
முகமூடியிட்டு திகிறது புன்னகை
நீ ஆக்கிய உணவு
உண்ண முடியாமல் நான்
பாத்திரம் நிறைய கோபம்
த்தனை அழகான காட்சி
உன் முகத்தில் ஒளிரும்
கோபம் என்னும் வானவில்
ன் புன்னகையை புறம்தள்ளி
என்னை ஈர்க்கும் காந்தம்
சிறு சிறு சிணுங்கல்கள்
புன்னகை கோபம் மௌனம்
என் ஆண்மையை ஆளும்
கூர்மையான உன் ஆயுதங்கள்

Monday 3 October 2011

நவீன பிச்சைகாரன்….


எந்த பிச்சைக்காரனும் 
ஓரிடத்தில் பிச்சைஎடுப்பதில்லை 
நான் மட்டும் எப்படி 
சிரிப்பு , அழுகை , கோபம் 
என்று எல்லாவற்றுக்கும் 
உன்னிடம்


எதுவும் தெரியாமல்....


வண்டுகளா
தேனீக்களா
தென்றலா
யார் கையில்
யார் காலில்
எதுவும் தெரியாமல்
தினம் தினம்
மலர்கிறது
மணவாளனைத்தேடி
சில மொட்டுகள்
மனிதரிலும்
மண் பாதையிலும்…

விரவிக் கிடத்துறது போதை!



பிரித்தாளும் இனவாதங்களில்
அதிகாரத்தி்ன் ஆட்சிகளில்
சில மதுக்கோப்பைகளில்
வெறிகொண்ட தாபங்களில்
பணமாடு்ம் நடனங்களில்
மானமாற்ற மதங்களில்
சொந்தங்களின் பாசங்களில்
சொத்துக்களின் மோகங்களில்
அன்பின் தேவைகளில்
அமைதியின் தனிமைகளில்
இலட்சியத்தின் விளிம்பில்
நின்று கொண்டு
எங்கெங்கும்
விரவிக் கிடத்துறது
போதை!

நண்பர்களே காதல்


அன்பே, 
உன் கண்கள் என்ன காந்தமா, 
என்னை கவர்ந்து விட, 
அன்பே, 
உன் இதயம் என்ன சுவாச பைய, 
உயிரை இழுத்து வைக்க, 
அன்பே, 
உன் உதடுகள் என்ன தேனிசைய, 
கேட்டுக்கொண்டு இருக்க, 
அன்பே, 
உன் கூந்தல் என்ன மலர் தோட்டமா, 
அழகை ரசித்திட, 
I .... LOVE....YOU... காதலே' ஜெயம் என்று 
சொல்லுவோமா…………அன்பிலும் சுகம், பிரிவிலும் சுகம், 
காக்கவைபதிலும் சுகம்,கண்ணீரிலும் சுகம், 

இதுபோல் எத்தனை சுகம், 
காதலே' ஜெயம், என்று சொல்ல, 
அனுபவித்து பார்' நண்பர்களே காதல்‘’’ 
எத்தனை பெரிய புதுமையானது….. 


நான் வாழ....


களவு போன இதயத்தை 

கடத்தி சென்று சிரித்து நின்று 

கண்களால் கவிதை சொல்கிறாய் 

காதல் என்று சொன்னால் மட்டும் 

இல்லை என்று உடனே மறுக்கிறாய் 

உன் காதல் கொடு இல்லை 

என் இதயம் கொடு 

நான் வாழ


காதலை நினைத்து ....


என்னவளே 


வருத்தமில்லை நீ மறுத்தபோதும் 

திருத்தம் இல்லை என் மனதில் 

உணர்வை காதல் மனதில் வந்த பிறகு 

உன்னை தவிர இடமில்லை காற்றுக்கும் 

குறைவாகவே சுவாசிக்கிறேன் 

மனதில் நம் காதல் வாழ 

சுவாசித்தால் தான் உயிர்வாழ்வேன் 

என்பதை மறந்து காதலை நினைத்து 

தேடியபோது கிடைக்க மறுத்த நட்புகள்


தேடியபோது
கிடைக்க மறுத்த
நட்புகள்
அன்புகள்
வெறுத்தப்போன
இன்று
இனியொரு அந்தி மாலையில்
அடிமன
ஆழக்கடலின்
ஏக்கங்களின் உயிர்ப்பில்
அஸ்தமனத்தில் தெரிகிறது
அடுத்த வாழ்க்கையின்
சூர்யோதயம்!

உன்னை சிறை வைப்பதால் !


என் அன்பே ! 
என் கண்களை என்னக்கே பிடிக்கவில்லை 
கனவு என்ற பெயரில் உன்னை சிறை வைப்பதால் !..


சூரியனே மறையாதே...

சூரியனே மறையாதே...
ஒருநாள் காதல்
இரு பூக்களுக்கு இடையில்…!
நானும் அவளும்
மனசால் பேசினோம்…
மலரும் மலரும்
மணத்தால் பேசியது…!
சூரியனே மறையாதே…
சுகமான காதல் தொடரட்டும்…!
உன் கண்கள் மூடியே இரவில் மலர்க்
காதலுக்கு கல்லறை கட்டாதே,,,!

வாழ்க்கை ....

வாழ்க்கை ஒரு சொர்க்கம் அதில் காலடி பதியுங்கள்
வாழ்க்கை ஒரு பள்ளி அதில் கல்வி பயிலுங்கள்
வாழ்க்கை ஒரு காதல் அதை அனுபவியுங்கள்
வாழ்க்கை ஒரு பரிசு அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு பாடல் அதைப் பாடிவிடுங்கள்
வாழ்க்கை ஒரு வனப்பு அதன் புகழ் பாடுங்கள்
வாழ்க்கை ஒரு சவால் அதை சமாளியுங்கள்
வாழ்க்கை ஒரு சாகசம் அதில் துணிவு காட்டுங்கள்
வாழ்க்கை ஒரு கடமை அதை செய்து முடியுங்கள்
வாழ்க்கை ஒரு வாய்ப்பு அதைப் பயன்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு வழிகாட்டி அதைப் பின்பற்றுங்கள்
வாழ்க்கை ஒரு பயணம் அதை தொடருங்கள்
வாழ்க்கை ஒரு வாக்குறுதி அதைக் காப்பாற்றுங்கள்
வாழ்க்கை ஒரு தெய்வீகம் அதைப் புரிந்துகொள்ளுங்கள்

என் காதல்.....


நீ வாசித்த கவிதைகள் 
நிறைய இருப்பினும் 
நீ வாசிக்காமலே இருக்கும் 
என்னுடைய முதல் கவிதையாய் 
என் காதல்