Monday 26 March 2012

உன்னில் என் நினைவு.....

உயிரே.....

உன் முகம் பார்த்தேன்
முகவரி இல்லை...

இதயம் கொடுத்தேன்...

இறுதி வரை
இருப்பிடம் நீயென்று...

என்னில் நிகழ்ந்ததில்லை...

என்றுமே இப்படியொரு மாற்றம்...

உன்னை என் உயிராக
உட்சுவாசிக்கிறேன்...

உனக்காகவே உயிர் வாழ்கிறேன்...

என் பெயர் மறந்து
உன் பெயர் உச்சரித்தேன்...

எனக்கு நீ உனக்கு நானென்பதால்...

எச்சரித்து விட்டாய்...

என்றுமே நான் உன்னை ஏற்றுகொள்ள முடியாததென்று...

உணர்வுகளை புரிந்து கொண்ட...

உண்மை அன்பு இருவரிடமும்
நீ என்னை பிரிந்தாலும்...

நீங்காயிடம் உன்னில் என் நினைவு.....

வலிகளே வாழ்கையானதோ ?

வலிகளே வாழ்கையானதோ ?
அன்பே ! நிரந்தரம் உன் பிரிவு என்றால்
இன்றே மரிப்பேன் என் உயிரை !
விழிகளோரம் உன் நினைவுகள் கண்ணீராக !
விதி மட்டும் ஏங்குதடி உன்னையும்
என்னையும் சேர்க்க !

கண்ணில்லாத இந்த காதல்
என் கண்ணீர்க்கு மட்டும் சொந்தமானதேனோ !
உண்மையோடு பிறந்த இந்த காதல்
இன்று நடு வழியில் ஊனமாக !
என் வலியின் ஆழத்தை நான் அவளுக்கு
இதுவரை உணர்த்தவில்லை !
தாங்க மாட்டாள் அந்த பிஞ்சு இதயத்துக்கு
சொந்தக்காரி !

காதலித்து திருமணம் செய்து கொண்ட
அவளது பெற்றோர்களே ! உங்களுக்கு தெரியாதா ?
அளவிட முடியாத அந்த வலியின் ஆழம் !
மனம் முழுவதும் மணம் வீசிய என் ரோஜா
இன்று தனி அறையில் தனி மரமாக !
காரணம் இல்லாமல் பிரிக்க துடிக்கும்
உன் பெற்றோர் !

கண்ணீர் மட்டும் போதாதடி !
உன் நினைவுகளை அழிக்க !
என்னவளே எனக்கு இன்னும் கொஞ்சம் வலிகொடு
நான் வலிகளை எழுதுவதில்
வைர முத்துவை தோற்கடிக்க வேண்டும் .....

எனை போல் நீயும்

காரணம் என்னவோ..
எனை போல் நீயும்
காதலித்து தோற்றயோ...!!!!

கல்லைறை கட்டவைத்தாய் !

அன்பே
நீ உதிர்த்த குப்பைகளை கூட
அழகாய் சேர்த்து வைத்தேன்
காதல் நினைவுகளாய் ,
ஆனால்
பெண்ணே,
என் அழகான
காதலையே நீ குப்பையாக்கிவிட்டாய்!

கனவில் நீ வரும்போது
என்
உறக்கத்தை கூட கலைத்ததில்லை ,
பெண்ணே நீயோ
எனக்காக
கல்லைறை கட்டவைத்தாய் !

தேய்ந்தே போனது என் கை ரேகைகள் !

பெண்ணே
உன்னால் என் இருதயத்தில்
உண்டான
காயங்களை ஆற்றி ஆற்றி
தேய்ந்தே போனது
என் கை ரேகைகள் !

கரையை அடைந்திருப்பேன் !

அவள்
கடலில் விட்டுச்சென்றிருந்தால்
நீந்தி
கரையை அடைந்திருப்பேன் !
காதலில் அல்லவா
விட்டுசென்றுவிட்டாள் -
மூச்சடைத்து
மூழ்கித்தான்
ஆகவேண்டும் !

தனிமையில் தவித்திருக்க மாட்டேன் !

உனக்கு சிரிக்க மட்டும்தான்
தெரியும் என்றிருந்தேன் !
என்னை சிதைக்கவும் தெரியும்
என்று தெரிந்திருந்தால் -
உன் சிரிப்பை ரசித்திருக்க மாட்டேன் !
உன் பெயரை சுவைத்திருக்க மாட்டேன் !
பசியோடு வாழ்ந்திருக்க மாட்டேன் !
இரவோடு விழித்திருக்க மாட்டேன் !
இன்று
தனிமையில் தவித்திருக்க மாட்டேன் !

கண்ணீரை வரச்செய்து விட்டாள் !

மாதுவை பிடிக்க வேண்டிய வயதில்
மதுவை குடிக்க வைத்து விட்டாள் !

அவள் புகைப்படத்தை பிடிக்க வேண்டிய என்னை
புகைபிடிக்க செய்துவிட்டாள் !

இயற்கையை ரசிக்க வேண்டிய வேளையில்
இறப்பை ரசிக்க செய்துவிட்டாள் !

கனவுகள் வரவேண்டிய கண்களில்
கண்ணீரை வரச்செய்து விட்டாள் !

என் இதயத்தினுள் இருக்கவேண்டியவள்
ஏனோ அதை இரண்டாய் பிளந்து விட்டாள் !

பேதைக்கு அடிமையாக வேண்டிய என்னை
போதைக்கு அடிமையாக செய்துவிட்டாள் !

அன்புக்கு எல்லையில்லை ...

அன்று நேரம் பார்க்காமல்
போனில் என்னோடு பேசியவள்
இன்று நேரில் பார்த்தாலும்
நின்று என்னோடு பேசுவதில்லை !

அன்று அன்புக்கு
எல்லையில்லை என்றவள்
இன்று உன் அன்பு
எனக்கு தேவையில்லை என்கிறாள் !

Thursday 8 March 2012

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்


"ஆணுக்குப்பெண் சரிநிகர் சமானம்"என்று வெறுமனே முழங்கினால் மட்டும் போதாது..அது சமூகத்தின் நடவடிக்கைகளிலும் இருக்கவேண்டும்...ஆனால் எங்கும் இருப்பதாக தெரியவில்லை..சில உதாரணங்களை பார்ப்போம்..
1.பிறந்த குழந்தைகளுக்கு பாலியல் வேறுபாட்டைக் காட்டக்கூடிய வகையில் மாறுபட்ட உடை,ஆபரணங்கள் அணிவித்தல்
2.பள்ளிக்குழந்தைகளை ஆண்பாலர் பள்ளி,பெண்பாலர் பள்ளி என பிரித்து வேறுபாடுகளை ஏற்படுத்துதல்
3.பேருந்துகளில் ஆண்கள்,பெண்களுக்கென தனிஇட ஒதுக்கீடு(கழிப்பிடத்தில் மட்டும் தனிமை இருந்தால் இப்போதைக்கு போதும்)
4.பொது இடங்களில் பெண்கள் தனி ஆண்கள் தனி என நடத்தப்படுவது
இப்படி ஒவ்வொரு விடயத்திலுமே ஆணையும் பெண்ணையும் எல்லாவற்றிலும் தனிமைப்படுத்திவிட்டு சரிநிகர் சமானம் என்று கூறிக்கொள்வதெல்லாம் வெறும் வெட்டிப்பேச்சு...எப்போதும் தன்னிடமிருந்து தனித்திருக்கிற இயல்பாக இல்லாத மறைத்துவைக்கப்படுகிற ஒன்றின் மேல்தான் ஆர்வம் மனிதர்களுக்கு எப்போதும் இருக்கும்..அது அதை திறந்துபார்க்கவும் சீண்டிப்பார்க்கவுமே தோன்றும்..இதை ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக உணரவேண்டும்..உணர்ந்து மாற்றிக்கொண்டால் சமூகம் தானாய் மாறும்..
(பின்குறிப்பு;சில மேலை நாடுகளுக்கு இந்த வரிகள் பொருந்தாது)
பெண்கள் தங்கள் மீதான அடக்குமுறைகள், தங்கள் சுயவிருப்பங்களை சமூகத்தில் நிறைவேற்றிக்கொள்ளவும் வெளிப்படுத்தவும்முடியாத நிலை,தங்களை சமூக சாதி மத மூடநம்பிக்கைகளை திணித்து ஏற்றிச்செல்லும் வாகனமாக இன்னும் பயன்படுத்தப்பட்டுகொண்டிருக்கும் நிலை என்ற பல பிற்போக்கான நிலைகளிலிருந்து பெண்கள் விரைவில் விடுதலை பெற்று வாழ இன்றைய மகளிர் தினத்தில் வாழ்த்துவோம். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

காதல் என்றும் புனிதம்தான்…


உடலை பிசைந்து தின்னும் காமம்
நாகரீகம் கருதி
காதலென்னும் பெயர் சூட்டிக் கொள்கிறது…

உயிரை உன்னதமாக்கும் காதலோ
தன் பெயர் களங்கமாவது கண்டு
செய்வதறியாமல் திகைக்கிறது…

எந்த திசையாய் இருந்தால் என்ன
விடியல் என்பது கிழக்கில்தான்..
எத்தனை களங்கம் செய்தாலும்
காதல் என்றும் புனிதம்தான்…

கன்னியிவளை மன்னித்துவிடு

அன்புக்குரியவரிற்கு
ஆசை வைத்த உள்ளத்தின்
இதய பூர்வ மடல்
ஈரைந்து மாதங்கள்
உயிரோடு எனை சுமந்து
ஊருக்கு காட்டிய
என் இனிய பெற்றவளுக்காய்,
ஏர் சுமந்து எமை காக்கும்
ஒழுக்கமான தந்தைகாய்,
ஓர் மனப்பட்ட எம் காதலை
ஔஷதமாய் நினைத்து
இஃது தியாகம் செய்கிறேன்
கண்ணாளனே!
காரிகை இவள்
கை கூப்பிக் கேக்கிறேன்
கன்னியிவளை மன்னித்துவிடு

உனக்கான காத்திருப்பு


உனக்கான காத்திருப்பு
கணங்கள் மணிகளானது
நாட்கள் வாரங்களானது!

நான் கொண்ட கவிதைக்கும்
கவலைகள் மிகுதியால்
சிறகொடிந்து போனது!

இருந்தும் தொடர்கிறது
உனக்கான காத்திருப்பு
மீதமுள்ள உயிரோடு!

உயிர்மூச்சு அடங்கும் முன்
உன் முகம் காண
உயிரிங்கு ஏங்குகிறது!

என்று வருவாய் என
ஏக்கங்கள் நிறைந்து படி
இன்னும் காத்திருக்கு!

ஒதுக்கி தள்ளியதேனடி?

ஒதுக்கி தள்ளியதேனடி?
மின்னலை போல
ஒற்றை ஒளிக்கீற்றாய்
உன் ஒரு புன்னகையில்
என் ஒட்டுமொத்த வாழ்வை
மொத்தமாக புரட்டி போட்டவளே!
ஒத்தை வார்த்தை சொல்லி - என்னை
ஒதுக்கி தள்ளியதேனடி?

பரிதவிப்பான ஏக்கத்துடன்!

என் தனிமையின்
ஒவ்வொரு நிமிடங்களும்
உன்னுடன் பழகிய
நட்பின் கனம் நிறைந்த
ஓராயிரம் நினைவுகளை
அள்ளிக் குவிக்கின்றன
அத்தனையும் இங்கு
முத்து முத்தாக என்
கன்னங்களை நிறைக்க
உயிரும் கரைகிறது
அன்பே உன் பாசத்தின்
பரிதவிப்பான ஏக்கத்துடன்!

உயிர் பிரியும் தருணங்கள்!


உன்னை பார்க்கும் வரை
என் கண்களுக்கு
கட்டளை போட்டிருந்தேன்
கண்ணீர் என்ற ஆற்றிற்கு
அணை போடும் படி!

உன்னை பார்த்த மறுநொடி
என்னையும் மீறி
கரைபுரண்டு உன்னையும்
காயப்படுத்திய என் கண்ணீரை
எப்படி தண்டிப்பது!

பிரிவின் கொடுமையை விட
அந்த பிரியப் போகும்
வலிகள் நிறைந்த நொடிகள்
வாழ்வில் மறக்க முடியா
உயிர் பிரியும் தருணங்கள்!

உன் நினைவுகளை சுமந்த
என் வலிகள் நிறைந்த இதயம்
உனக்காக கையசைத்து
உள்ளத்து உறுத்தலுடன்
உருக்கமாய் செல்கிறது!

என்றும் இனிமையே!


அன்பே!
இன்றோடு நீ
என்னை விட்டு சென்றாலும்
நீ விட்டுச் சென்ற நினைவுகள்
என்றும் என் மனதிலே...!

நீ தந்த காயங்கள்
நெஞ்சோடு இருந்தாலும்
நினைத்துப் பார்க்கையில்
என்றும் இனிமையே!

உன்னாலே கிடைத்த
உறவுகள் ஆயிரம்
உயிரோட்டமான வாழ்க்கையின்
உயிருள்ள ஓவியங்கள்

சென்று வா அன்பே
உன் நினைவுகளுடன்
உனதன்பு உறவோடு
இன்னும் வாழ்வேன்..........!

உயிருள்ள தோழியே!


அன்பே!
உன்னோடு பேச
உதடுகள் துடித்தாலும்
உன்னைப் பார்த்த நொடி
அத்தனையும் அடங்கியது

நம் ஸ்பரிச தீண்டலில்
உண்டான உணர்வுகள்
ஓராயிரம் கதைகளை
ஒப்புவித்து சென்றது

விழியோடு விழி பேசி
விடை தேட நினைக்கையில்
விடை காணா வினாவாக
விழிகள் நிறைகின்றது

உன்னை விட்டு பிரியும்
ஒவ்வொரு கணப்பொழுதில்
உண்டான ஏக்கங்கள்
இன்னும் என் கண்முன்னே....!
ஊமையாய் கதைகள் பேசி
உள்ளுக்குள்ளே அழுகின்றன.

நட்பின் புன்னகைக்கு
உதடுகள் தேவையில்லை
இதயமே போதுமென
உன்னாலே அறிந்தேன்
உயிருள்ள தோழியே!