Sunday, 4 March 2012

மணந்தால் நீ...

மணந்தால் நீ
இல்லையேல் மரணம் - என்று
கூறமாட்டேன் - அது
இயலாதவன் கூற்று
மணந்தால் நீ
இல்லையேல் மனதில் நீ - என்று
கூறமாட்டேன் - அது
நம்பிக்கை இல்லாதவன் கூற்று
மணந்தால் நீ
இல்லையேல் மற்றொருத்தி - என்று
கூறமாட்டேன் - அது
மோசடிக்காரன் கூற்று

No comments: