Thursday, 8 March 2012

உயிருள்ள தோழியே!


அன்பே!
உன்னோடு பேச
உதடுகள் துடித்தாலும்
உன்னைப் பார்த்த நொடி
அத்தனையும் அடங்கியது

நம் ஸ்பரிச தீண்டலில்
உண்டான உணர்வுகள்
ஓராயிரம் கதைகளை
ஒப்புவித்து சென்றது

விழியோடு விழி பேசி
விடை தேட நினைக்கையில்
விடை காணா வினாவாக
விழிகள் நிறைகின்றது

உன்னை விட்டு பிரியும்
ஒவ்வொரு கணப்பொழுதில்
உண்டான ஏக்கங்கள்
இன்னும் என் கண்முன்னே....!
ஊமையாய் கதைகள் பேசி
உள்ளுக்குள்ளே அழுகின்றன.

நட்பின் புன்னகைக்கு
உதடுகள் தேவையில்லை
இதயமே போதுமென
உன்னாலே அறிந்தேன்
உயிருள்ள தோழியே!

No comments: