Thursday, 8 March 2012

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்


"ஆணுக்குப்பெண் சரிநிகர் சமானம்"என்று வெறுமனே முழங்கினால் மட்டும் போதாது..அது சமூகத்தின் நடவடிக்கைகளிலும் இருக்கவேண்டும்...ஆனால் எங்கும் இருப்பதாக தெரியவில்லை..சில உதாரணங்களை பார்ப்போம்..
1.பிறந்த குழந்தைகளுக்கு பாலியல் வேறுபாட்டைக் காட்டக்கூடிய வகையில் மாறுபட்ட உடை,ஆபரணங்கள் அணிவித்தல்
2.பள்ளிக்குழந்தைகளை ஆண்பாலர் பள்ளி,பெண்பாலர் பள்ளி என பிரித்து வேறுபாடுகளை ஏற்படுத்துதல்
3.பேருந்துகளில் ஆண்கள்,பெண்களுக்கென தனிஇட ஒதுக்கீடு(கழிப்பிடத்தில் மட்டும் தனிமை இருந்தால் இப்போதைக்கு போதும்)
4.பொது இடங்களில் பெண்கள் தனி ஆண்கள் தனி என நடத்தப்படுவது
இப்படி ஒவ்வொரு விடயத்திலுமே ஆணையும் பெண்ணையும் எல்லாவற்றிலும் தனிமைப்படுத்திவிட்டு சரிநிகர் சமானம் என்று கூறிக்கொள்வதெல்லாம் வெறும் வெட்டிப்பேச்சு...எப்போதும் தன்னிடமிருந்து தனித்திருக்கிற இயல்பாக இல்லாத மறைத்துவைக்கப்படுகிற ஒன்றின் மேல்தான் ஆர்வம் மனிதர்களுக்கு எப்போதும் இருக்கும்..அது அதை திறந்துபார்க்கவும் சீண்டிப்பார்க்கவுமே தோன்றும்..இதை ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக உணரவேண்டும்..உணர்ந்து மாற்றிக்கொண்டால் சமூகம் தானாய் மாறும்..
(பின்குறிப்பு;சில மேலை நாடுகளுக்கு இந்த வரிகள் பொருந்தாது)
பெண்கள் தங்கள் மீதான அடக்குமுறைகள், தங்கள் சுயவிருப்பங்களை சமூகத்தில் நிறைவேற்றிக்கொள்ளவும் வெளிப்படுத்தவும்முடியாத நிலை,தங்களை சமூக சாதி மத மூடநம்பிக்கைகளை திணித்து ஏற்றிச்செல்லும் வாகனமாக இன்னும் பயன்படுத்தப்பட்டுகொண்டிருக்கும் நிலை என்ற பல பிற்போக்கான நிலைகளிலிருந்து பெண்கள் விரைவில் விடுதலை பெற்று வாழ இன்றைய மகளிர் தினத்தில் வாழ்த்துவோம். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

No comments: