Thursday 1 December 2011

அடைந்துவிட்டேன் நரகத்தை!!


நீ தான் ரோஜாவோ?
உன் காதல் எனும் முள்
என் கண்களைக் குத்தி
காயப்படுத்துகிறது!
உன் காதல் எனக்கு வேண்டாம்.
மனம் சொல்ல...
எனினும் உன் மணம்
எனை ஈர்க்கிறது...
நம்பிக்கைகளையும் உணர்ச்சிகளையும்
என் மீது திணித்தாய்
ஏற்றுக்கொண்டேன்.
வானம் தாண்டி வா..
எனைக் காண என்றாய்..
உனக்காக நான்
கடல் தாண்டி
கரை தாண்டி
மலை ஏறி
பூமி கடந்து
மேகத்தின் குளிரைக் கடந்தேன்
பிறகோ.. சூரியன்
அதன் வெப்பத்தில்
ஒரு பகலைக் கழித்தேன்
உனக்காக பெண்ணே!
ஒளி மங்கியது.
கண் மயக்கும் இருள் படர்ந்து
நான் வெண்ணிலவில்
கால் பதிக்கும் நேரமும் வந்தது
நிலவில் நான் நிற்க
மதியின் பாதி உன் முகம்
நிலவின் ஒரு பாதி நான்
மறுபாதி நீயென
எழில் மிகு இரவில்
நம் அன்பின் ஆழத்தைக்கண்டு
நட்சத்திரங்களெல்லாம்
கைத்தட்டும் கண்கொள்ளா காட்சியை
எங்ஙனம் வருணிக்க!
நம் மயக்கமெனும் பூட்டை
திறக்கும் வண்ணம்
விடியல் ...
நீ மறையத் தொடங்கினாய்
ஏஙகினேன் உன் வருகைக்காக
நெடுதூரம் பயணித்தேன்
சொர்க்கப்பாதையைத் தொட்டேன்..
காதல் செய்பவர்களுககான
முதல் அடி போல.....
முதலடியே சொர்க்கமா?
ஒருகணம் பிரம்மித்துப்போனேன்
சுவரெல்லாம் உன் வரைபடம்
உன் சித்திரத்தின் மையாகக்
கூடாதா என்ற தாகம்
உன்னைத் தேடினேன்...
சொர்க்கத்தின் தங்கமாக ஜொலித்தாய்!
உனை கட்டித் தழுவி
அழ துடித்தேன்..
நீயோ,செல் என்று கூறி மறைந்தாய்
நடுங்கினேன்...
உடலெல்லாம் ஊசி குற்றியது.
எனை எங்கோ இழுத்துச்சென்றது
போகும் இடமெல்லாம்
நீ பேசிய வார்த்தைகள்
சிதறிக்க்டந்தன...
என் குருதியும்..அதோடு கலந்தது
பூமியில் விடியல்
விண்ணில் நான் அடைந்த இடம் இருள்
அருளற்ற இருள்!
யாதென புரியவில்லை
என்னைப் போல்
அங்கு பலர்
சொர்க்கம் கடந்துவந்தவர்களாம்!
இருக்கும் இடத்துக்கு வைத்தபெயர் நரகம்
காதலின் பொழுது தேனைச்சுவைத்தவர்களாம்
காதலித்தேன் ....காதலித்தேன்
காதலைத்தேன்... காதலைத்தேன்
........ என்றவர்கள்..
ஆம் காதல் தேன் தான்
ஆனால் வற்றிவிடுவது..
அமுதசுரபி இல்லையே?
இன்று என் காதலும் வற்றிவிட்டது
அடைந்துவிட்டேன் நரகத்தை!!

No comments: